வியாழன், 29 ஜனவரி, 2015

தயிர் உறை ஊற்றுதல்

பாலை தயிராக்கும் முறை:




பாலை உறை ஊற்றுவதுனு உரைநடையாக சொல்வது எங்கவீட்டில் வழக்கமில்லை.
பால பெறை ஊத்தியாச்சா?  இருங்க பால பெறை ஊத்திட்டு வாரேன் என்றே சொல்வோம். பெறை போட்டாச்சானும் சொல்வது உண்டு.

இப்ப எப்படி பால பெறை ஊத்தி சரியான முறையில் தயிராக்குவதுனு பார்ப்போம்.

முதலில் பாலை நன்கு காய்ச்சி எடுத்து வைக்கவேண்டும்.
காய்ச்சிய பாத்திரத்திலிருந்து  வேறு பாத்திரத்திற்கு மாற்ற வேண்டும்.
மாற்றிய பிறகு பால் இருக்கும் பாத்திரத்தின் அடிப்பகுதியை தொட்டுப்பார்த்தால் கை பொறுக்கும் சூட்டில் இருக்கும் சமயம் ஒரு ஸ்பூன் புளிக்காத தயிரை அப்பாலினுள் ஊற்ற வேண்டும்.

பாலை கலக்கவோ, பாத்திரத்தை அசைக்கவோ கூடாது. ஒரு முக்கியமான விசயம், பெறை போட்ட பாலை கண்டிப்பாக மூடி வைக்கவேண்டும். அப்பொழுதுதான் தெவையும்.

இரவு படுக்க போகும் முன் ஊற்றினால் காலையில் புளிக்காத தயிர் கிடைக்கும்.
தயிராகி விட்டது :)


எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்தால் மதியம்  சாதத்திற்கு சரியாக இருக்கும்.
மிகவும் வெப்பமான ஊர்களில் காலையில் பெறை போட்டால் மதியம் தெவைந்து (துவைந்து)விடும்.
எங்கள் ஊரில் காலையில் போட்டால் தெவைவது இல்லை.
சில சமயம் காலையில் பெறை போட நேரிடுமானால் ஹாட்பாக்ஸில் பாலை பெறை ஊத்தி வைத்துவிடுவேன்.




திக்கான ஆடை



ஆடை சேமிப்பு :)
மதியம் தயிராகிவிடும்.

சரி ஒரு ஸ்பூன் தயிர் கூட வீட்டில் இல்லேனா என்ன செய்வது என்பவர்களுக்கு, பச்சை மிளகாயை கிள்ளி போட்டால் துவைந்து விடும்.

அப்படியும் இல்லையேல் அரை மூடி எலுமிச்சையை பிழிந்து விட்டால் தயிர் கிடைக்கும். ஆனால் இவை எல்லாமே சுவையில் மாறுபடும்.

எங்கள் பால்காரர் சுத்தமான தண்ணி கலக்காத பாலையே கொடுப்பார். அதனால்தான் காய்ச்சிய பாலில் இவ்வளவு ஆடை தென்படுகிறது.

 தயிர் ஆடையை சேமித்து வைத்து அவ்வப்பொழுது வெண்ணய் எடுத்துவிடுவேன்.
சுத்தமான மாட்டு வெண்ணய் கிடைக்கும்.
அதனை அடுத்த பதிவில் பார்ப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்