புதன், 6 மே, 2015

இட்லிமாவு போண்டா



 இட்லிமாவு போண்டா இது ஒரு திடீர் பலகாரமாகும். இதனை செய்வது மிகவும் எளிது.

தேவையான பொருட்கள்:

இட்லிமாவு........2 கப்

அரிசிமாவு.....2 மேசைக்கரண்டி

கேரட் ......2

பெரியவெங்காயம்.......2

கறிவேப்பிலை.......4 இணுக்கு

சீரகம் .........1/2 மேசைக்கரண்டி

இஞ்சி......சிறுதுண்டு

பூண்டு.............4 பல்

மிளகாய் தூள்......2 தேக்கரண்டி(காரத்திற்கேற்ப)

உப்பு......தேவையான அளவு

கடலை எண்ணைய்.......பொரிப்பதற்கு



கேரட்டை துருவிக்கொள்ளவும்.

பெரியவெங்காயத்தை பொடியாக அரியவும்.

கறிவேப்பிலையை பொடியாக அரியவும்.

இஞ்சி, பூண்டை துருவிக்கொள்ளவும்.

இட்லிமாவுடன் அரிசி மாவை கலக்கவும்.


எண்ணைய் தவிர்த்து அனைத்து பொருட்களையும் மாவில் கலக்கவும்.

கலக்கிய கலவையை சிறு சிறு உருண்டைகளாக  காய்ந்த எண்ணையில் போட்டு பொரிக்கவும். எண்ணைய் சூடானவுடன் மிதமான தீயில் வைத்தே சுடவேண்டும்.
அப்பொழுதுதான் நன்கு உள்பக்கமும் வேகும். இல்லையேல் மேல்மாவு தீய்ந்தும் உள்பக்கம் பச்சையாகவும் இருக்கும். இருபுறமும் நன்கு வெந்தவுடன் எடுத்து எண்ணைய் வடிய வைக்கவேண்டும்.

 சுவையான இட்லிமாவு போண்டா தயார்.
இட்லிமாவு அரைத்தவுடன் சுட்டால் ருசி வராது.  ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து அறை வெப்பநிலைக்கு கொண்டுவந்த பிறகே சுடவேண்டும்.
மற்ற மாவு போண்டா போல எண்ணையில் போட்டவுடன் , குதித்தெழுந்து வராது. வாணலியின் அடிப்பகுதியில் அப்பிக்கொள்ளும். மிதமாக கரண்டியால் எடுத்து மிதக்கவிடவேண்டும். 

இஞ்சி, பூண்டினை துருவி சேர்ப்பதால் நன்கு மணமாக இருக்கும். 

ஒண்ணா ரண்டா உடைத்த மிளகு சேர்த்து செய்தாலும் சுவை கூடுதலாக இருக்கும்.
 
பச்சைமிளகாயை பொடியாக அரிந்தோ அல்லது அரைத்தோ சேர்க்கலாம். 
பொடியாக நறுக்கிய மல்லிதழை ஒரு கைப்பிடி சேர்த்தால் சுவை இன்னும் கூடுதலாக இருக்கும். 

                                           ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

படித்ததில் பிடித்தது:

கடவுள் உன்னிடமிருந்து தன்னை எப்போதும் மறைத்துக் கொள்வதில்லை. நீ தான் உன் கோப தாபங்களால் எப்பொழுதும் அவரைக் காணமுடியாத படி கண்களை மூடிக்கொள்கிறாய்.

ஓஷோ.

                                                         _((()))_


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்