செவ்வாய், 7 ஜூலை, 2015

நல்ல முட்டையா ? கெட்ட முட்டையா?

 முட்டைகளை நல்லது கெட்டது என தரம் பிரிப்பது என்பது மிகவும் எளிதான ஒன்று.

ஒரு பாத்திரத்தில் நீரை நிரப்பி அதனுள் முட்டைகளைப் போட்டால் நீரில் மூழ்கும் முட்டை நல்லது.

மேலே மிதக்கும் முட்டை கெட்டது.
நீரில் மிதக்கும் கெட்ட முட்டை!!

ஐந்து முட்டைகளில் இரண்டு மட்டுமே நீரில் மூழ்கி மூச்சடக்கி தான் நல்லவ(வி)ன் என சாதிக்கிறது!! :))
ஒவ்வொரு முறை முட்டையை நேரிடையாக உடைத்து ஊற்றும் படியான பதார்த்தங்கள் செய்தால் கட்டாயம் இது போல் பரிசோதித்த பின்னரே பயன்படுத்த வேண்டும்.

வேக வைக்கும் பொழுது பொதுவாக பிரச்சனைகள் வர வாய்ப்பில்லை, ஏனெனில் நீரில் போடும் பொழுது நமக்கு வித்யாசம் தென்பட்டு விடும்.
கேக் மற்றும் ஆம்லட் போடும் பொழுதும் இதே முறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
சற்று முன் வாங்கியதுதானே, ஒரு நாள் தானே ஆயிற்று என நினைத்து குழாய் நீரில் கழுவி விட்டு அப்படியே உடைத்து ஊற்றுவது நல்லதல்ல.

அதே போல் சிறு குழந்தைகளுக்கு அதாவது எட்டு, ஒன்பது மாதக்குழந்தைகளுக்கு முட்டை கொடுக்கலாம் என சொல்கிறார்கள். ஆனால் அவ்விதம் கொடுத்து உடல் நலக் குறைவு ஏற்பட்ட நிலையை நானும் அனுபவித்து என் தோழிகளும் அனுபவித்த நிலையும் உண்டு.
அதுவும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் அளவிற்கு சென்றது என்பதை அனுபவரீதியாக உணர்ந்திருக்கிறேன்.
இதனை ஒரு கூடுதல் தகவலாகவும், என் அனுபவ நிகழ்வாகவும் இங்கு பதிந்திருக்கிறேன். 

                                                    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படித்ததில் பிடித்தது:
ஒவ்வொரு ஆண்டும் ஒரு தீய பழக்கத்தை வேரோடு களைந்து விடுங்கள்.

                                                           _(((())))_                                                         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்