திங்கள், 30 மார்ச், 2015

கேரட் ஆம்லெட்

 ஞாயிறன்று காலை நேரவரைக்கும் தூங்கிட்டீங்களா? இல்ல காலை உணவுக்கு என்ன செய்யலாம்னு யோசிச்சே சோர்வாகிட்டீங்களா? கவலைய விடுங்க, உங்களுக்காகவே காத்திட்டிருக்கு இக்குறிப்பு!!

தேவையான பொருட்கள்:

முட்டை..........4 (வீட்டு உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கேற்ப, தலா 1)

கேரட்..........2 (நடுத்தர அளவிலானது)

மிளகு........1 மேசைக்கரண்டி (பொடித்தது)

உப்பு .......தேவைக்கேற்ப

கடலை எண்ணைய்........ 1மேசைக்கரண்டி ( விருப்பமான எண்ணைய் பயன்படுத்தலாம். இதனை விட குறைவாகவும் பயன்படுத்தலாம்)

செய்முறை:

கேரட்டை மிகவும் சன்னமாக துருவிக்கொள்ளவும்.

முட்டையை ஒரு சிறு பாத்திரத்தில் ஊற்றி , கேரட், உப்பு, பாதி மிளகுதூள் போட்டு நன்கு அடித்துக்கொள்ளவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானவுடன் , பாதி எண்ணைய் தடவி அடித்து வைத்த முட்டைக் கலவையை பரவலாக ஊற்றவும்.

மீதி எண்ணைய்யை மேற்பரப்பில் பரவலாக ஊற்றவும்.

அடுப்பை மிதமாக எரியவிடவும்.

கலவை தீய்ந்து போகாத அளவிற்கு வேகவிட்டு, திருப்பி போடவும்.

இருபுறமும் நன்கு வெந்தவுடன் எடுக்கவும். மேலே மீதி மிளகுதூளை தூவிக்கொள்ளவும்.

விருப்பப்பட்டால் ரொட்டித்துண்டுகளில் வெண்ணைய் தடவி, துண்டுகளாக்கிய ஆம்லெட்டை இடையில் வைத்து உண்ணலாம்.

கூடவே பழரசம் அருந்திக்கொள்ளலாம்.

ஞாயிறு காலை உணவை இனிதே முடித்துக்கொள்ளலாம்.





இதன் சுவை மிகவும் நன்றாக இருந்தது!!

                                     ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

படித்ததில் பிடித்தது:

உனக்கு மன அமைதி வேண்டுமானால், பிறரிடத்துக் குற்றம் காணாதே. அதற்கு பதிலாக உன் குற்றங்களையே நீ எண்ணிப்பார்.

அன்னை. சாரதாதேவி.

                                                               _()()_()()_

2 கருத்துகள்:

  1. வெங்காயம் தேவையில்லையோ ? ரொம்பவே ஈசியா இருக்கும் போல :) கலர்ஃபுல் ஆம்லெட் .

    பதிலளிநீக்கு
  2. வெங்காயம் சேர்த்தும் செய்யலாம். நான் அன்று மட்டும் வெங்காயம் சேர்க்கவில்லை. ரொம்ப ரொம்ப ஈஸிதான் வாணி :) மிக்க நன்றி :)

    பதிலளிநீக்கு

கருத்து நெல்மணிகள் இங்கு சேமிக்கப்படும்